உலகம்

ஆப்கன்: ஒரே நாளில் 89 விமானங்கள் மூலம் 12,500 பேரை மீட்டது அமெரிக்கா

27th Aug 2021 07:16 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த 24 மணிநேரத்தில் 89 விமானங்கள் மூலம் 12,500 பேரை அமெரிக்க ராணுவம் மீட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். இந்நிலையில், அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் ஆகஸ்ட் 31-க்குள் அனைத்து அமெரிக்கர்களும் தாயகத்திற்கு மீட்கப்படுவார்கள் என அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, கடந்த 15 நாள்களாக மீட்புப் பணியை அமெரிக்க அரசு துரிதப்படுத்தியது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை இன்று வெளியிட்ட செய்தியில்,

“காபூலில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 12,500 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில், 35 அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் 8,500 பேரும், 54 கூட்டு விமானங்கள் மூலம் 4,000 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

ஆகஸ்ட் 14ஆம் தேதியிலிருந்து 1,05,000 பேரும், ஜூன் மாத இறுதியிலிருந்து 1,10,600 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.”

ADVERTISEMENT
ADVERTISEMENT