இந்திய பாஸ்போர்ட்டை வைத்துள்ளவர்களுக்கு சுற்றுலா விசா அளிக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளது.
கடைசி 14 நாள்களில், தாய்நாட்டிற்கு பயணம் செய்யாத இந்தியர்களுக்கு சுற்றுலா விசா அளிக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளது. இந்தியர்கள் மட்டுமின்றி, நேபாளம், நைஜீரியா, பாகிஸ்தான், இலங்கை, உகாண்டா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் சுற்று விசா அளிக்கப்படவுள்ளது.
கரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் வழியே பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே தற்போது சுற்றுலா விசா அளிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க | சென்னை அன்றும்..இன்றும்.. சுவாரசிய தகவல்கள்!
ADVERTISEMENT
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்பவர்கள், அந்த நாளும் ஒன்பதாவது நாளும் ஆர்டி-பிசிஆர் சோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.