உலகம்

கமலா ஹாரிஸ் ஆசிய நாடுகளுக்கு பயணம்

22nd Aug 2021 11:44 AM

ADVERTISEMENT

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில் அங்கு பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், தனது ஆசிய நாடுகள் பயணத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியுள்ளார். 

அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதை தொடர்ந்து, ஒரே வாரத்தில் நாட்டின் முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து, தலிபான்களுக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேற ஆயிரக்கணக்கான மக்கள் முயற்சி செய்துவருகின்றனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என முழுக்கமிட்டு ஆப்கானிஸ்தானில் நுழைந்த அமெரிக்காவிற்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதற்கு மத்தியில், சிங்கப்பூர், வியட்நாம் போன்ற ஆசிய நாடுகளுக்கு கமலா ஹாரிஸ் பயணம் செய்வது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 

ADVERTISEMENT

இதையும் படிங்கதலிபான்கள் தாக்கினால் தக்க பதிலடி

இந்நிலையில், சிங்கப்பூருக்கு இன்று காலை சென்றுள்ள கமலா ஹாரிஸ், நாட்டின் முக்கிய தலைவர்களை நாளை சந்திக்கவுள்ளார். ஆசிய அமெரிக்கரான கமலா ஹாரிஸின் தாய், தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT