உலகம்

ஆப்கனில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை

22nd Aug 2021 04:59 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு கால போர் முடிவுக்கு வந்த நிலையில் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து தலைநர்க் காபூலில் இருந்த பல்வேறு நாட்டின் தூதரகங்கள் காலிசெய்யப்பட்ட நிலையில் தங்கள் நாட்டினரையும் அந்தந்த நாடுகள் மீட்டு வருகின்றன. 

இந்நிலையில், ஏற்கெனவே இருமுறை ஆப்கனில் இருந்து இந்தியர்களை மீட்டு வந்தது விமானப்படை விமானம். இந்நிலையில் இன்று 107 இந்தியர்கள்உள்பட  168 பயணிகளுடன் சி-17 விமானம்  காசியாபாத் நகரில் உள்ள ஹிண்டன் இந்திய விமானப் படை தளத்தில் தரையிறங்கியது. 

இதையடுத்து பாதுகாப்பு கருதி ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த 168 பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT

Tags : afghanistan
ADVERTISEMENT
ADVERTISEMENT