தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசை ஆதரவளிப்பது குறித்து இன்னும் பரிசீலிக்கவில்லை என ஜப்பான் நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். அங்கு ஆட்சியமைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
தலிபான்களுக்கு சீனா ஆதரவளித்துள்ள நிலையில் மற்ற நாடுகள் ஆப்கன் நிலவரம் குறித்து கண்காணித்து வருகின்றன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்களை அங்கீகரிப்பது குறித்து இன்னும் பரிசீலிக்கவில்லை என ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர் கட்சுனோபு கட்டோ தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவர் பேசுகையில், நாட்டின் நலன் மற்றும் அமெரிக்கா உள்பட சம்மந்தப்பட்ட பிற நாடுகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஜப்பான் தேவையான முடிவை எடுக்கும் என்று கூறினார்.
மேலும், 'இப்போதைய நிலைமை நிச்சயமற்றது. அதனால் இப்போது அறிவிப்பு வெளியிடுவது சரியானதாக இருக்காது. நிலைமையை முழுவதும் கண்காணித்த பிறகு ஆலோசனைக்குப் பின்னர் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | 'அடையாளங்களை அழித்து விடுங்கள்' - ஆப்கன் கால்பந்து வீராங்கனைகளுக்கு கேப்டன் வலியுறுத்தல்