உலகம்

‘அதிகாரப் பகிர்வு செய்து கொள்ளலாம்’: தலிபான்களுக்கு அழைப்பு விடுத்த ஆப்கன் அரசு

12th Aug 2021 06:14 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் ஓங்கிவரும் நிலையில் அதிகாரப் பகிர்வு செய்துகொள்ள அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுக்கும் இடையேயான மோதல் உச்சம் பெற்று வரும் நிலையில் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி  தொடர்ந்து தலிபான்கள் முன்னேறி வருகின்றனர். 

இதையும் படிக்க |  ஆப்கானிஸ்தான் : ராணுவத் தளபதியை மாற்றிய அதிபர் 

ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணங்களை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ள தலிபான்கள் இதுவரை 65 சதவிகிதம் பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். 

ADVERTISEMENT

இந்நிலையில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ள தலிபான் அமைப்பினருக்கு ஆப்ஜ்கானிஸ்தான் அரசு அழைப்பு விடுத்துள்ளது. 

இதையும் படிக்க |  ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அளித்த எம்.ஐ.35  ஹெலிகாப்டரை கைப்பற்றிய தலிபான்கள்  

போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுவதாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் 10 முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் தலைநகர் காபூலை நோக்கி முன்னேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT