உலகம்

தாய்லாந்தில் பிரதமர் பதவி விலகக் கோரி தீவிரமடையும் போராட்டம்

11th Aug 2021 08:54 PM

ADVERTISEMENT

கரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்படாததாகக் கூறி தாய்லாந்தில் அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

தாய்லாந்து நாட்டில் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று பரவல் அதிகரித்தவண்ணம் உள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டாலும் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது.

இதையும் படிக்க | நாளை விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப் 10 ராக்கெட்

இந்நிலையில் பிரதமர் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா பதவி விலகக் கோரி தலைநகர் பாங்காக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

கடந்த சில நாள்களாக போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில்பிரதமர் பதவி விலகக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதனைத் தொடர்ந்து காவலர்கள் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டத்தைக் கலைத்தனர்.

இதையும் படிக்க |  ‘இதுவரை 52 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’: மத்திய அரசு

தாய்லாந்தில் இதுவரை 816,989 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,588 பேர் தொற்று பாதிப்பினால் பலியாகியுள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT