உலகம்

ஆப்கன் தலைவர்கள் தொடர்ந்து போரிட வேண்டும்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

11th Aug 2021 11:45 AM

ADVERTISEMENT

தலிபான்களுக்கு எதிராக ஆப்கன் தலைவர்கள் தொடர்ந்து போரிட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், ஆப்கன் தலைவர்கள் தொடர்ந்து போரிட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 65 சதவிகித நிலபரப்பை தலிபான்கள் கைப்பற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பாக்லான் மாகாணத்தின் தலைநகரான பூல்-இ-ஹுமியை தலிபான்கள் நேற்று மாலை கைப்பற்றினர். இருப்பினும், ஆப்கன் படைகளின் கோட்டையான கேலகி பாலைவனத்திலிருந்து ராணுவம் பதில் தாக்குதல் நடத்திவருவதாக அங்கிருக்கும் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஒரே வாரத்தில், ஏழு தலைநகர்களை கைப்பற்றிய தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் வேகமாக முன்னேறிவருகி்ன்றனர். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதுகுறித்து கூறுகையில், "ஆப்கன் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும். தலிபான்களை விட ஆப்கன் படைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். எனவே. போரிடவே அவர்கள் விரும்புவார்கள். அவர்களுக்காகவும் அவர்களின் நாட்டுக்காகவும் தொடர்ந்து போரிட வேண்டும்.

ADVERTISEMENT

இதையும் படிக்கபாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: நியூயாா்க் ஆளுநா் ராஜிநாமா

ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை திரும்ப பெறும் முடிவு குறித்து வருந்தவில்லை. கடந்த 2o ஆண்டுளில் 1 ட்ரில்லியன் டாலர்களை செலவழித்துள்ளோம். ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இழந்துள்ளோம். விமானம், உணவு, உபகரணங்கள், ஆப்கன் படைக்கு ஊதியம் ஆகியவற்றை அமெரிக்க தொடர்ந்து வழங்கும்" என்றார்.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானின் ஜனநாயக விழுமியத்தை காக்க மக்கள் முன்வர வேண்டும் என அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானி கோரிக்கை விடுத்துள்ளார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT