உலகம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 2 காவலர்கள் பலி, 13 பேர் காயம்

8th Aug 2021 09:58 PM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் காவலர்கள் வேன் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 காவலர்கள் பலியானார்கள். 
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இன்று மாலை காவலர்கள் வேன் அருகே குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 2 காவலர்கள் பலியானார்கள். 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்தர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
குண்டுவெடிப்பு காரணமாக அருகில் உள்ள கட்டடங்களின் ஜன்னல்களும் சேதமடைந்தன. இதற்கிடையே, இந்த சம்பவத்துக்கு பலுசிஸ்தான் முதல்வர் ஜம் கமல் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 

Tags : Pakistan
ADVERTISEMENT
ADVERTISEMENT