உலகம்

வான்வழி தாக்குதலில் ஈடுபட்ட ஆப்கன் படைகள்: 200 தலிபான்கள் பலி

8th Aug 2021 12:13 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதலை மேற்கொண்ட ஆப்கன் படைகள் 200 தலிபான்களை படுகொலை செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் செபேர்கன் நகரில் தலிபான்கள பதுங்கியிருந்த இடங்களில் ஆப்கன் விமானப்படை அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக, தலிபான்களுக்கு அதிக அளவில் உயர் சேதம் ஏற்பட்டுள்ளது. 200 தலிபான்கள் கொல்லப்பட்டதாக ஆப்கன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆப்கன் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அலுவலர் பாவத் அமான் தனது ட்விட்டர் பக்கத்தில், "செபேர்கன் நகரில் ஆப்கன் தலிபான்கள் பதுங்கியிருந்த இடங்களில் விமானப்படை மேற்று மாலை தாக்குதல் நடத்தியதில் 200 தலிபான்கள் கொல்லப்பட்டனர். 

 

ADVERTISEMENT

இதன் காரணமாக, தலிபான்களின் ஆயுதங்கள், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் அழித்து நாசமாக்கப்பட்டது. மாலை 6:30 மணி அளவில் B-52 ரக வெடிகுண்டு வீசப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது" என பதிவிட்டு்ள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கஜினி மாகாண மையத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதியை ஆப்கன் ராணுவ படை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்தது. பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ள அவர், பல அப்பாவி மக்களை கொன்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதையும் படிக்கராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் நிறுத்தப்பட்டதற்கு காரணம் என்ன?


 

ADVERTISEMENT
ADVERTISEMENT