உலகம்

தீவிரமாகும் டெல்டா கரோனா: திணறும் ஆஸ்திரேலியா

8th Aug 2021 12:34 PM

ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகை அதிகமுள்ள மூன்று மாநிலங்களில் மொத்தமாக 282 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

டெல்டா வகை கரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் ஆஸ்திரேலியா திணறி வருகிறது. இந்நிலையில், மக்கள் தொகை அதிகமுள்ள நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, குவின்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில் மொத்தமாக 282 பேருக்கு கரோனா இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டது.

நியூ சவுத் வேல்ஸ் தலைநகரான சிட்னியில் கடந்த ஆறு வார காலமாக ஊரடங்கு அமலில் இருந்தபோதிலும், இன்று மட்டும் 262 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிக்கராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் நிறுத்தப்பட்டதற்கு காரணம் என்ன?

ADVERTISEMENT

இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறுகையில், "சுகாதார விதிகளை பின்பற்றுமாறு அனைவரையும் கேட்டு கொள்கிறேன். அவசிய காரணங்களுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வாருங்கள்" என்றார்.

நியூ சவுத் வேல்ஸ் மருத்துவமனையில் 362 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதில், 58 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள 54 பேர் தடுப்பூசி செலுத்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT