உலகம்

நேபாளம் : கரோனாவால் 10,000 பேர் பலி 

7th Aug 2021 04:26 PM

ADVERTISEMENT

கரோனாவின் தாக்கம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளத்திலும்  அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேபாளத்தில்   இதுவரை கரோனாவால் 10,019 பேர்  உயிரிழந்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தினமும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் 2,430 பேர் புதிதாக தொற்றில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும்  அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம்  தெரிவித்திருக்கிறது.

இதையும் படிக்க | 'ஒரு தவணை தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பது கரோனாவுக்கு எதிரான போரில் நாட்டை வலுப்படுத்தும்'

கரோனா தொற்று தொடங்கியதில் இருந்து தற்போது வரை  7.10 லட்சம் பேர்  பாதிப்படைந்திருப்பதாகவும் அதில் 34,942 சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

ADVERTISEMENT

இந்தியா ,சீனா , அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து கரோனா  தடுப்பூசிகளை இறக்குமதி செய்த நேபாளம் இதுவரை 44.5 லட்சம் மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி வழங்கியிருக்கிறார்கள். 

இதற்கிடையில் தொற்று பரவலை அரசு கையாண்ட விதத்தை மருத்துவ வல்லுநர்கள் விமர்சித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT