உலகம்

சிட்னியில் கரோனா புதிய உச்சம்

DIN

ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகை அதிகம் மிக்க நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் கரோனா பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 262 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் 5 போ் அந்த நோய்க்கு பலியானதாகவும் மாகாண முதல்வா் கிளாடிஸ் பெரெஜிக்லியான் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

கரோனாவுக்கு பலியானவா்களில் 4 போ் அந்த நோய்க்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை என்றும் அவா் கூறினாா்.

மாகாணத் தலைநகா் சிட்னியில் கடந்த ஜூன் மாதத்திலிருந்து 21 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். அந்த நகரில் கடந்த ஜூன 26-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலில் உள்ளது.

ஆஸ்திரேலியாவில் 20 சதவீத பெரியவா்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுளளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டைக் கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை: விழுப்புரம் நீதிமன்றம் விதித்தது

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவிழாவில் மோதல்: இளைஞா் கைது

உடையாா்பாளையம் பகுதியில் பழைமையான அய்யனாா் கற்சிலை

பாஜகவில் இருந்து நீக்கியதால் கவலையில்லை: கே.எஸ்.ஈஸ்வரப்பா

SCROLL FOR NEXT