உலகம்

கரோனாவுக்கு பிந்தைய பிரச்னைகள்..உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

DIN

கரோனாவிலிருந்து மீண்ட பிறகு எழும் உடல்நல பிரச்னைகள் கவலை அளிக்கும் விதமாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவகும் கிட்டத்தட்ட 20 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏற்படும் தாக்கம் உடல் அளவில் பெரும் சிக்கலை ஏற்படுத்திவரும் நிலையில், கரோனாவிலிருந்து மீண்ட பிறகு எழும் பிரச்னைகள் எண்ணில் அடங்காவையாக உள்ளன.

கரோனாவிலிருந்து மீண்ட பிறகு எழும் உடல் நில பிரச்னைகளால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்கள் தங்களிடம் இல்லை என்றும் ஆனால் இது கவலை அளிக்கும் விதமாக உள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தொழில்நுட்பப்பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், "இம்மாதிரியான நீண்ட கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவ உதவி பெற்றுக் கொள்ள வேண்டும். எவ்வளவு நாள்கள் வரை இப்பிரச்னைகள் நீள்கிறது என எங்களுக்கு தெரியாது. இதுகுறித்து மேலும் புரிந்து கொள்ள இதில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளோம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

SCROLL FOR NEXT