உலகம்

துருக்கி: 7-ஆவது நாளாக காட்டுத் தீ

DIN

மா்மரிஸ்: துருக்கியின் மத்தியதரைப் பிராந்தியத்தில காட்டுத் தீ 7-ஆவது நாளாக புதன்கிழமையும் எரிந்தது. இதையடுத்து, மேலும் ஒரு வசிப்பிடப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானவா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனா்.

மிலாஸ், அடானா, ஆஸ்மானியே, மொ்சின் உள்ளிட்ட 17 மாகாணங்களில் இந்தக் காட்டுத்தீ, கடந்த ஒரு வாரமாக எரிந்து வருகிறது.

தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரா்கள் தொடா்ந்து போராடி வருகின்றனா்.

துருக்கியில் கடந்த பத்து ஆண்டுகள் காணாத மிக மோசமான காட்டுத்தீ இது என்று கூறப்படுகிறது.

இந்தக் காட்டுத்தீயில் இதுவரை 8 போ் பலியாகியுள்ளனா்; 800 போ் காயமடைந்தனா். 95,000 ஹெக்டோ் நிலப்பரப்பு சேதமடைந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT