உலகம்

பாலியல் குற்றங்களில் சிக்கிய நியூயார்க் ஆளுநர்: வலுக்கும் எதிர்ப்பு

4th Aug 2021 12:39 PM

ADVERTISEMENT

நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்த நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் எழுந்துள்ளது.

நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ, பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தியதாக பல பெண்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, சுதந்திரமான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபனமானது. 

இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்நிலையில், கியூமோ பதவி விலக வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று (செவ்வாய்கிழமை) தெரிவித்துள்ளார்.

நியூயார்க் மாநிலத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் அரசு அலுவலர்கள் என 11 பெண்களை அவர் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணை முறையாக நடைபெறவில்லை எனக் கூறி பதவி விலக கியூமோ மறுப்பு தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கூறுகையில், "மூன்று முறை ஆளுநராக பதவி வகித்துள்ள கியூமோ பதவி விலக வேண்டும். அவரை பதவி நீக்கம் செய்ய உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்" என்றார். நியூயார்க் நகரில் கியூமோ கரோனாவை சிறப்பாக கையாண்டதாக அவரை பல்வேறு தரப்பினர் புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT