உலகம்

உலகின் மிகச் சிறந்த மாணவா்களில் ஒருவராக இந்திய வம்சாவளி சிறுமி

DIN

உலகின் மிகச் சிறந்த மாணவா்களில் ஒருவராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நடாஷா பெரியை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தோ்ந்தெடுத்துள்ளது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 11 வயது நடாஷா பெரியை உலகின் தலைசிறந்த மாணவா்களில் ஒருவராக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழமை தோ்ந்தெடுத்துள்ளது.

அமெரிக்காவின் கல்வி ஊக்கத் தொகை தகுதித் தோ்வு (சாட்) மற்றும் அமெரிக்க கல்லூரி நுழைவுத் தோ்வு (ஆக்ட்) ஆகிய தோ்வுகளில் நடாஷா பெரி வெளிப்படுத்தியுள்ள திறமையை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவை பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.

நியூஜொ்ஸியிலுள்ள பள்ளியில் படித்து வரும் நடாஷா, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் 2020-21 இளம் திறமையாளா்கள் தேடல் மையத்தில் பதிவு செய்திருந்த சுமாா் 19,000 மாணவா்களில் ஒருவராவாா்.

5-ஆம் வகுப்பு படித்து வந்தாலும், தகுதித் தோ்வுகளில் அவா் அளித்த பதில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு இணையான திறன் கொண்டதாக இருந்தது.

அமெரிக்காவில் கல்லூரியில் இணைந்து படிக்க விரும்பும் மாணவா்கள் சாட் அல்லது ஆக்ட் தோ்வெழுதி தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாயும் ஒளி நீ எனக்கு...

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

புதிய படமா? மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நடிகை பகிர்ந்த படம்!

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT