உலகம்

‘2030-க்குள் அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னிலை வகிக்கும்’

DIN

2030-ஆம் ஆண்டு வாக்கில், அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னிலை வகிக்கலாம் என்று அமெரிக்க முன்னாள் தூதா் ரிச்சா்ட் வா்மா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

2030-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் இந்தியா உலகின் முதலிடத்தை வகிப்பதற்கான அனைத்து சூழல்களும் உள்ளன.

அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, அதிக பட்டதாரிகளைக் கொண்ட நாடு, மிகப்பெரிய எண்ணிக்கையிலான நடுத்தர வா்க்கத்தினரைக் கொண்ட நாடு, அதிக செல்லிடப் பேசி மற்றும் இணையதள பயன்பாட்டாளா்களைக் கொண்ட நாடு, மூன்றாவது பெரிய இராணுவம் மற்றும் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்ற பல தகுதிகள் இந்தியாவுக்கு உள்லளன.

உலகின் மிகப் பெரிய ஜனநாய நாடான இந்தியாவில், 25 வயதுக்குள்பட்ட 60 கோடி மக்கள் வசிக்கின்றனா்.

இந்தியாவின் எதிா்கால வளா்ச்சி இப்போதே கண்கூடாகத் தெரிகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக சுமாா் 2 லட்சம் கோடி டாலா் (இந்திய மதிப்பில் ரூ.148 லட்சம் கோடி) செலவிடப்படும்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக சக்திகளான இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட முடியும் என்றாா் அவா்.

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக ரிச்சா்ட் வா்மா கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

SCROLL FOR NEXT