உலகம்

ஐபோனில் புதிய வசதியைக் கொண்டு வரும்  'கூகுள் ' 

4th Aug 2021 05:20 PM

ADVERTISEMENT

ஐபோன் உபயோகிப்பாளர்களுக்கு கூகுள் புதிய வசதியை அறிமுகப்படுத்த இருக்கிறது. கூகுளின் தவிர்க்க முடியாத செயலிகளில்  ஒன்றான 'கூகிள் மேப்' எனும் வழிகாட்டும் செயலி பல்வேறு தரப்பினருக்கும் தேவைப்படும் ஒன்றாக இருந்து வருகிறது.  ' தெரியாத இடம் ' என்கிற பேச்சுக்கு இடம் கொடுக்காத இச் செயலி தற்போது ஐபோனில் புதிய ' புதிப்பித்தலை ' கொண்டுவருகிறது.

கூகுள் வரைபடத்தில் பிரகாசமாக இருந்த திரை அமைப்புடன் ' டார்க் மூட்' எனும் வெளிச்சத்தை குறைந்து காட்டக்கூடிய வசதியும் ஐபோனில் வரவிருக்கிறது. தொலைதூர பயணத்தில் செல்போனின் பாட்டரி சேமிப்பை  தக்கவைக்கவும் ,கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கஒலிம்பிக்ஸ் மகளிர் ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா தோல்வி

கூகுள் மேப்   ' டார்க் மூட் ' வசதியை  இந்தாண்டு தொடக்கத்தில்  ஆண்ட்ராய்டு சாதனங்களில் அறிமுகப்படுத்தியது . ஆனால் ஐபோன் ஐஒஸ் 13 சாதனங்களில் வரவிருக்கும் புதிய வசதி ஆண்ட்ராய்டில் வெளியான திறனைவிட கொஞ்சம் மாற்றமிருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

கூகுள் மேப் ' டார்க் மூட் ' மட்டுமல்லாது தகவலைப் பரிமாறிக்கொள்ளும் படி 'மெசேஜ் இன்டெக்ரேஷன் ' வசதியையும் அறிமுகப்படுத்த இருக்கிறது கூகுள். 

மேலும் நாம் இருக்கும் இடத்தை சரியான துல்லியத்துடன்   ஐ மெசேஜ்  செயலியின் மூலமாக பகிரலாம் என்றதோடு பகிரப்படும் இடத்தின் தகவலை  மூன்று நாட்கள் வரை  அல்லது நாம் விரும்பும் வரை நீட்டித்துக்கொள்ளலாம்  என்றும் தெரிவித்திருக்கிறார்கள் 

இதையும் படிக்கடி20 உலகக் கோப்பை: அக்டோபர் 24-இல் இந்தியா, பாகிஸ்தான் மோதல்?

ஐபோன் தொடுதிரையின் முதல் பக்கத்திலேயே செயலி அமையும் படி செய்ததோடு  பயணத்தின்போது எங்கெல்லாம் வாகன நெரிசல் இருக்கிறது என்பதையும் தெரிவிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கூகுள் தரப்பில் அளித்த தகவலில்  , " கூகுள் மேப் ' டார்க் மூட் ' வரும் வாரத்தில் ஐபோனில் அறிமுகமாகும் என்றும் அதற்கான அமைப்பில் சென்று டார்க் மூடை தேர்வு செய்து உபயோகப்படுத்தலாம் என்றும்  செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் " என்றும்  கூறியிருக்கிறார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT