உலகம்

ஆப்கனில் பாதுகாப்பு அமைச்சர் குடியிருப்பு அருகே குண்டுவெடிப்பு: 8 பேர் பலி

DIN

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிஸ்மில்லா முகமதி குடியிருப்பின் அருகில் தலிபான்களால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 8 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினருக்கும், அரசுக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகிறது. தலிபான்களை தாக்குதலை கட்டுப்படுத்த ஆப்கன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு காபூல், சிர்பூர் பகுதியில் உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் பிஸ்மில்லா முகமதியின் குடியிருப்பின் அருகில் தலிபான்கள் திடீர் குண்டு வெடிப்பை நடத்தினர்.

இந்தக் குண்டுவெடிப்பில் 8 பேர் பலியாகினர். மேலும் 20 படுகாயமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆப்கன் அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்கள் அதிகம் வசிக்கும் ஆப்கன் நகரங்களில் அரசுப் படையினருக்கும் தலிபான்களுக்கும் மோதல் தீவிரடைந்து வருவது குறித்து ஆப்கன் விவகாரங்களுக்கான ஐ.நா. பிரிவு கவலை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT