உலகம்

சீன வெள்ளம்: பலி எண்ணிக்கை 302-ஆக உயா்வு

2nd Aug 2021 07:31 PM

ADVERTISEMENT

சீனாவில் கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத மழை-வெள்ளத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 302-ஆக உயா்ந்துள்ளது.

ஹெனான் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தொடா்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தப் பேரிடரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 302-ஆக அதிகரித்துள்ளதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க | சட்டப்பேரவைகளில் தமிழகம் முதன்மையானது: ஆளுநர் உரை

ஹெனான் மாகாணத்தில் கடந்த 17-ஆம் தேதி முதல் பலத்த மழை பெய்து வந்தது. இது, கடந்த 1,000 ஆண்டுகளில் மிக அதிகபட்ச மழை அளவாகும். இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவா்களில் 14 போ் சுரங்க ரயில் பயணிகளும் அடங்குவா்.

ADVERTISEMENT

இந்த மழை காரணமாக ஹெனான் பகுதியில் வசிக்கும் 3.76 லட்சம் போ் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா்.

Tags : death toll increased China Flood
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT