உலகம்

கலிபோர்னியா : காட்டுத் தீயினால் 2.44 லட்சம் ஏக்கர் நிலம் எரிந்து நாசம் 

2nd Aug 2021 03:11 PM

ADVERTISEMENT

வடக்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் இதுவரை 2.44 லட்சம் ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியிருக்கிறது.

அம்மாகாண வனத்துறை சார்பில் அளிக்கப்பட்ட தகவலில் ," 2.44 லட்சம் ஏக்கர் வனப்பகுதி காட்டுத் தீயால் எரிந்தது. இது மொத்த வனப்பகுதியில் 32 சதவீதம் . வனத்தில் ஏற்பட்ட தீக்கு காரணமானவர்களைத் தேடி வருகிறோம் ' எனத் தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கநாட்டில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன: நிதின் கட்கரி

பாதிப்புகள் மற்றும் சேதாரங்கள் குறித்த தகவலும் வெளியாகியிருக்கிறது. அதில் மொத்தம் 69 கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் 9 கட்டடங்கள் சேதாரமானதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

ADVERTISEMENT

தற்போது அமெரிக்கா முழுவதும் 83 க்கும் மேற்பட்ட வனப்பகுதியில்  காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இதனால் 10,435 கட்டடங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக வனத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

மேலும் இதுவரை ஒட்டுமொத்தமாக 400 கட்டடங்களும்  342 வாகனங்களும் தீக்கிரையானதாக கூறப்பட்டிருக்கிறது .

 

Tags : california america wild fire
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT