உலகம்

ஆப்கானிஸ்தான் : ராணுவத் தாக்குதலில் 254 தலிபான்கள் பலி 

2nd Aug 2021 10:43 AM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அத்துமீறல் அதிகரித்தது வரும் நிலையில் ஆப்கன் அரசாங்கம் மேற்கொண்ட தாக்குதல்களில் கடத்த 24 மணி நேரத்தில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 254  உயிரிழந்ததாகவும் , 97ம் பேர் படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் உறுதி செய்திருக்கிறார்.

கடந்த 24 மணி நேரத்தில் ராணுவம்  காஸ்னி , கந்தகர் , ஹெராத் , பாரக் , ஜொஸ்வான், பால்க் , சமன்கண் , ஹெல்மாண்ட் , தஹார் , குண்டுஸ் மற்றும் காபூல் பகுதியில் நடத்திய தாக்குதலில் சிக்கி 254 தலிப்பான்கள் இறந்ததாகவும் , அவர்களிமிருந்து பயங்கர ஆயுதங்களையும் ,13 சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து அதை செயலிழக்கச் செய்திருப்பதாகவும் பாதுகாப்புத்துறை சார்பில்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கஇந்தியாவில் இன்று மேலும் 40,134 பேருக்கு கரோனா

தலிபான்கள் வசமிருக்கும் 193 மாவட்டங்களின் மையங்கள் மற்றும் 19 மாவட்ட எல்லைகளை மீட்கும் பணியில் தீவிரமாக இயங்கி வரும் ராணுவத்தினரை  தலிபான்கள் தாக்கியதில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து  இதுவரை  4,000 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

ADVERTISEMENT

மேலும் அவர்கள் அளித்த தகவலில் ,தலிபான்களால்  ராணுவத்தினர்  7,000 பேர் காயமடைந்தாகவும் , 1600 பேரை  சிறைபிடித்ததாகவும் , பொதுமக்கள் 2,000 பேரை சுட்டுக்கொன்றதாகவும்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

Tags : taliban afghanistan attack
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT