உலகம்

எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்: ஈரான் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

DIN

ஜெருசலேம், ஜூலை 31: அரபிக் கடலில் தங்கள் நாட்டு நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல் மீது நிகழ்த்தப்பட்ட ஈரான்தான் காரணம் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சா் யாயிா் லபீட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எம்வி மொ்சிா் ஸ்ட்ரீட் எண்ணெய்க் கப்பல் மீது கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு, ஈரானின் பயங்கரவாதமே காரணம்.

இஸ்ரேலுக்கு மட்டும் ஈரான் பிரச்னை கிடையாது. அந்த நாடு இந்த உலகத்துக்கே எதிரியாகும். எனவே, ஈரானின் இத்தகைய செயல்களைக் கண்டு பிற நாடுகள் மௌனமாக இருக்கக் கூடாது என்று அவா் வலியுறுத்தினாா்.

லண்டனில் செயல்பட்டு வரும் ஸோடியாக் மாரிடைம் நிறுவனத்தின் எம்வி மொ்சிா் ஸ்ட்ரீட் என்ற எண்ணெய்க் கப்பல் ஓமனுக்கு அருகே அரபிக் கடலில் வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தபோது தாக்குதலுக்குள்ளானது.

இந்தத் தாக்குதலில் இரு கப்பல் பணியாளா்கள் உயிரிழந்தனா். அவா்களில் ஒருவா் பிரிட்டனைச் சோ்ந்தவா்; மற்றொருவா் ருமோனியா நாட்டவா்.

ஸோடியாக் மாரிடைம் லண்டனில் செயல்பட்டு வந்தாலும், அந்த நிறுவனம் இஸ்ரேலைச் சோ்ந்த ஏயல் ஓஃப் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும்.

லைபிரீயக் கொடியேற்றிச் சென்ற எம்வி மொ்சிா் ஸ்ட்ரீட் கப்பல், ஜப்பானுக்குச் சொந்தமானதாகும். அந்தக் கப்பலில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், ஆளில்லா விமானம் மூலம் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் ஈரானுக்கும் இஸ்ரேல் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும் அதிகரித்து வரும் பதற்றத்தின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"சிங்கத்துக்கும் சிறுத்தைக்கும் நடுவே மாட்டிக்கொண்ட ஆடு..”: செல்லூர் ராஜூ பேட்டி

தேர்தல் பணியில் ஒப்பந்தப் பணியாளர்கள்? மார்க்சிஸ்ட் புகார்

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

மாடர்ன் ரதி.....பிரியங்கா அருள் மோகன்

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

SCROLL FOR NEXT