உலகம்

வடக்கு இஸ்ரேலில் மத திருவிழா: கூட்டநெரிசலில் சிக்சி 44 பேர் பலி

30th Apr 2021 12:04 PM

ADVERTISEMENT

 

வடக்கு இஸ்ரேலின் மவுண்ட் மெரோனில் நடைபெற்ற மததிருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்சி 44 பேர் உயிரிழந்தனர். 

இஸ்ரேலில், வடக்கே மவுண்ட் மெரான் என்ற பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘லாக் பி’ ஓமர் நினைவு தினத்துக்காக அவருடைய கல்லறை பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். 

அதன்படி, இன்று காலை நடைபெற்ற திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட நிலையில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்சி 44 பேர் இதுவரை உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவற்றில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 

ADVERTISEMENT

இஸ்ரேலில் கரோனா தொற்று குறைந்த நிலையில், இந்த மத திருவிழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்று இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் மக்களை வலியுறுத்தியது. இருப்பினும் மக்கள் கூட்டம் அலையெனத் திரண்டனர். 

கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களைக் கொண்டுசெல்ல ஆறு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. 

குறிப்பாக கடந்தாண்டு இந்த மத திருவிழாவுக்குத் தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT