உலகம்

‘இந்தியாவிலிருந்து வெளியேறுங்கள்’: அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்

29th Apr 2021 04:56 PM

ADVERTISEMENT

நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் தங்கள் நாட்டு மக்களை நாடு திரும்ப அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்குநாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3.79 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா தொற்று காரணமாக ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இந்தியாவுடனான விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன. 

இந்நிலையில் அதிகரித்துவரும் கரோனா தொற்று காரணமாகவும், போதிய மருத்துவ வசதியின்மை காரணமாகவும் அமெரிக்கர்கள் உடனடியாக சொந்த நாடு திரும்ப வேண்டும் என அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 

ADVERTISEMENT

Tags : USA Coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT