உலகம்

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 3,019 பேர் பலி; புதிதாக 77,266 பேருக்கு தொற்று

29th Apr 2021 02:21 PM

ADVERTISEMENT

 

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 3,019 பேர் கரோனா தொற்று பலியாகியுள்ளனர்.  மேலும் புதிதாக 77,266 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

உலக அளவில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் வேகமாக பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் தொற்று பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. உயிரிழப்பில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 77,266 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 1,45,23,807 ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் தொற்று பாதித்த 3,019 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 398,343 ஆக அதிகரித்துள்ளது.  

ADVERTISEMENT

தொற்று பாதித்தவர்களில் 8,318 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 10,33,750 -ஆக உயா்ந்துள்ளன. நாட்டில் இதுவரை 1,30,91,714 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Brazil Coronavirus Cases Deaths
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT