உலகம்

கரோனா எதிரொலி: பொதுமுடக்கம் அறிவித்தது துருக்கி

27th Apr 2021 08:29 AM

ADVERTISEMENT

 

துருக்கியில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, ஏப்ரல் 29 முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் மே 17 வரை துருக்கியில் முழு பொதுமுடக்கம் இருக்கும் என்றும், நாட்டில் ஒரு நாள் பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைப்பதே தற்போதைய இலக்கு என்றும் துருக்கி அதிபர் அறிவித்துள்ளார்.

துருக்கியின் ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்துக்கு முன் அனுமதியுடன் மட்டுமே பொதுமக்கள் பயணிக்க முடியும் என்றும், மாகாணங்களுக்கு இடையே 50 சதவீத பொதுப் போக்குவரத்து மட்டுமே இயக்கப்படும் என்றும், பள்ளிகள் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கரோனா பாதிப்பு குறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், திங்கள்கிழமையன்று புதிதாக 37,312 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,67,281 ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 353 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 38,711ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவிலிருந்து 48,027 பேர் குணமடைந்தனர். 
இதையடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 41,21,671ஆக உயர்ந்துள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT