ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,053 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது,
அதன்படி, புதிதாக 8,053 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து மொத்த பாதிப்பு 47,79,425 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், ஒரே நாளில் 392 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,08,980 ஆக அதிகரித்துள்ளது.
ADVERTISEMENT
தலைநகர் மாஸ்கோவில் ஒரேநாளில் 2,098 பேர் பாதிக்கப்பட்டுளள்னர்.
மேலும், தொற்று பாதித்த 4,402,678 பேர் நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில் தற்போது 2,67,767 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரஷியாவில் இதுவரை 80 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.