உலகம்

இந்தியர் தயாரித்த ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது

27th Apr 2021 08:10 AM

ADVERTISEMENT

 

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரான ஸ்வாதி தியாகராஜன் துணை தயாரிப்பாளராக இருந்த "மை ஆக்டோபஸ் டீச்சர்' ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. 

விருது கிடைத்ததற்கு அவர் சுட்டுரையில் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்தியர்களுக்கு  அஞ்சலி


கடந்த ஆண்டில் மறைந்த பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான், ஆஸ்கர் விருது வென்ற ஆடை வடிவமைப்பாளர் பானு அத்தய்யா உள்ளிட்டோருக்கு ஆஸ்கர் விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.  ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்தியரான பானு அத்தய்யா, கடந்த ஆண்டு அக்டோபரில் உடல்நலக் குறைவு காரணமாக மறைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் இர்ஃபான் கான் கடந்த ஆண்டு ஏப்ரலில் காலமானார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT