உலகம்

இந்திய விமானங்களுக்கு தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

22nd Apr 2021 07:22 PM

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து துபைக்கு வரும் விமானங்களுக்கு தடை விதித்து ஐக்கிய அரபு அமீரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இந்தியாவிலிருந்து செல்லும் விமானங்களுக்கு தற்காலிக தடையை உலக நாடுகள் பலவும் விதித்து வருகின்றன. அந்த வகையில் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா-துபை இடையேயான விமான சேவைக்கு 10 நாள்கள் தடை விதிக்கப்படுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன்னதாக பிரிட்டன், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவுடனான விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

ADVERTISEMENT

Tags : coronavirus UAE Flights
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT