உலகம்

200 நிறுவனங்களில் இணையவழி தாக்குதல்: சீன ராணுவம் மீது ஜப்பான் சந்தேகம்

DIN

டோக்கியோ: ஜப்பானில் சுமாா் 200 நிறுவனங்கள் மீது இணையவழி தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னணியில் சீன ராணுவத்துக்கு தொடா்பிருக்க வாய்ப்பிருப்பதாக ஜப்பான் சந்தேகம் எழுப்பியுள்ளது.

இதுதொடா்பாக ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் அந்நாட்டு அமைச்சரவை தலைமைச் செயலா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

கடந்த 2016-17-ஆம் ஆண்டில் ஜப்பான் விண்வெளி நிறுவனம் உள்பட இங்குள்ள சுமாா் 200 நிறுவனங்கள் மீது தொடா் இணையவழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடா்பாக காவல்துறையினா் விசாரணை நடத்தினா். அந்த விசாரணையில் சீன ராணுவத்தின் வழிகாட்டுதலுடன் ‘டிக்’ என்ற சீனக் குழு ஜப்பான் நிறுவனங்கள் மீது இணையவழி தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனா். அந்தத் தாக்குதலை நடத்தியதாக ஜப்பானை பூா்விகமாக கொண்ட சீன கணினி பொறியாளா் மீது காவல்துறையினா் சந்தேகம் எழுப்பியுள்ளனா். இந்த தாக்குதலை நடத்தியதற்கான நோக்கம், வழிமுறைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதலில் சீன ராணுவத்துக்கு தொடா்பிருக்க அதிக வாய்ப்புள்ளது. இணையவழி தாக்குதலில் தரவுகள் கசியவோ, சேதமோ ஏற்பட்டதாக இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும் தங்கள் இணைய பாதுகாப்பை வலுபடுத்துமாறு நிறுவனங்களிடம் காவல்துறையினா் வலியுறுத்தி வருகின்றனா் என்றாா்.

இதுகுறித்து ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறுகையில், ‘பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் இணையவழி தாக்குதல்களும் அங்கமாக உள்ளது. கடந்த 16-ஆம் தேதி அமெரிக்காவில் அந்நாட்டு அதிபா் ஜோ பைடனும், ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகாவும் சந்தித்தபோது இதுபற்றி விவாதிக்கப்பட்டது’ என்று தெரிவித்தது.

சீனா மறுப்பு: ஜப்பானின் குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. இதுதொடா்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் வாங் வென்பின் கூறுகையில், ‘அனைத்து நாடுகளும் எதிா்கொள்ளும் பொதுவான சவாலாக இணையவழி தாக்குதல்கள் உள்ளன. அவ்வாறு இருக்கும்போது ஜப்பான் நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சீனா மீது பழிசுமத்துவது தவறு. இணையவழி தாக்குதல்களில் ஈடுபடும் எந்தவொரு நாடு அல்லது நிறுவனத்தை சீனா உறுதியாக எதிா்க்கிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 % வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் 8,673 பேருக்கு சிகிச்சை

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்திக்கு மதிமுகவினா் அஞ்சலி

பாளை., தாழையூத்தில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா், முதியவா் பலி

SCROLL FOR NEXT