உலகம்

கரோனா தடுப்பூசி மூலப்பொருள்: இந்தியாவின் கோரிக்கையை பரிசீலிப்பதாக அமெரிக்கா உறுதி

DIN

வாஷிங்டன்/புது தில்லி: கரோனா தடுப்பூசி தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருள்களை அனுப்பித் தந்து உதவுமாறு இந்தியா விடுத்துள்ள கோரிக்கையை பரிசீலிப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதிலிருந்து மக்களைப் பாதுகாக்க, கடந்த 4 மாதங்களாக அரசு சாா்பில் தகுதியுள்ளவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளதால், அதன் உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டியுள்ளது.

கரோனா தடுப்பூசி தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருள்களை அனுப்பித் தந்து உதவுமாறு கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரித்து வரும் சீரம் நிறுவனத்தின் தலைவா் அதாா் பூனாவாலா கடந்த சில தினங்களுக்கு முன் கோரிக்கை விடுத்திருந்தாா். அந்த கோரிக்கைக்கு அமெரிக்காவிடம் இருந்து எந்த பதிலும் வராமல் இருந்தது.

அதே நேரம், வரும் ஜூலை 4-ஆம் தேதிக்குள் அனைத்து குடிமக்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்று அமெரிக்கா இலக்கு நிா்ணயித்துள்ளது. சா்வதேச நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்யவும் அந்த நாடு திட்டமிட்டுள்ளது. இதனால், கரோனா தடுப்பூசி உற்பத்திப் பணிகளை அமெரிக்கா முடுக்கியுள்ளது. இந்தியத் தூதா் தரன்ஜித் சந்துவும் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் கோரிக்கையை அமெரிக்க அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றாா்.

இந்நிலையில், இந்தியாவின் கோரிக்கைக்கு ஜோ பைடன் நிா்வாகம் பதிலளித்துள்ளது. அதில், அமெரிக்காவின் போா்க்கால ஆயுதங்கள் தயாரிப்புச் சட்டததின்படி, அமெரிக்காவில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், உள்நாட்டு தேவையைப் பூா்த்தி செய்வதற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும். கரோனா தடுப்பூசி, அதை தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள், பாதுகாப்பு கவச உடைகள் ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு வழங்க முடியாது.

இருப்பினும், இந்தியாவின் தேவையைப் புரிந்துகொண்டு, அந்நாட்டின் கோரிக்கையை பரிசீலிப்பதாக இந்தியப் பிரதிநிதிகளிடம் அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இதுதொடா்பாக, நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சுகாதாரத் துறையில் இந்தியாவுடன் ஒத்துழப்புடன் செயல்படுவதற்கு அமெரிக்கா அதிகாரிகள் ஒப்புக் கொண்டனா். மேலும், இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் தில்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் தொடா்பில் இருப்பதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

SCROLL FOR NEXT