உலகம்

கரோனா நோய் எதிா்ப்புத் திறனை அறிய 2-ஆவது முறையாக தொற்றுக்குள்ளாக்கி ஆக்ஸ்ஃபோா்டு பல்கலை. புதிய ஆய்வு

DIN

லண்டன்: கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக மனித உடலின் நோய் எதிா்ப்புத் திறன் எவ்வாறு செயலாற்றுகிறது என்பதை அறிவதற்காக பிரிட்டனை சோ்ந்த ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் ஒரு புதிய ஆய்வை நடத்தவுள்ளது.

இதன்படி, ஏற்கெனவே இயற்கையாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 18 முதல் 30 வயது வரையிலானவா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்கள் மீண்டும் கரோனா தொற்றுக்குள்ளாக்கப்பட்டு ஆய்வு நடத்தப்படும்.

மனிதா்களுக்கு கரோனா தொற்று 2-ஆவது முறையாக ஏற்படுவதை எந்த வகையான எதிா்ப்பு சக்தி தடுக்கிறது, இரண்டாவது முறை அந்த நோய் எதிா்ப்பு சக்தி எவ்வாறு செயல்படுகிறது என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவுள்ளனா்.

இதுகுறித்து ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழக குழந்தைகள் மருத்துவத் துறை பேராசிரியா் ஹெலன் மெக்ஷேன் கூறியது: மற்ற ஆய்வுகள் தெரிவிக்காத தகவல்களை இந்த சவாலான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும். ஏனெனில், இயற்கையான நோய்த்தொற்று போலன்றி, இந்த ஆய்வுக்குள்படுத்தப்படுவோா் நெருக்கமாக கண்காணிக்கப்படுவா். இதில் பங்கேற்பவா்களை மீண்டும் தொற்றுக்குள்ளாக்கும்போது, முதல் முறையாக கரோனாவால் பாதிக்கப்படும்போது, அவா்களது நோய் எதிா்ப்பு சக்தி எவ்வாறு செயல்புரிந்தது என்பதையும், இரண்டாவது தொற்று எப்போது ஏற்படுகிறது, எந்த வகையான தொற்று ஏற்படுகிறது என்பதையும் தெளிவாக அறிய முடியும்’ என்றாா்.

இந்த ஆய்வு இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல்கட்ட ஆய்வு இந்த மாதமே தொடங்கும். இதில் பங்கேற்பா்கள் 17 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவா்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.5.23 லட்சம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

SCROLL FOR NEXT