உலகம்

மியான்மா் புத்தாண்டு: 23,000 கைதிகள் விடுவிப்பு

DIN

மியான்மரின் பாரம்பரிய புத்தாண்டு தினத்தையொட்டி, அந்த நாட்டின் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 23,000-க்கும் மேற்பட்ட கைதிகள் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

எனினும், விடுவிக்கப்பட்ட கைதிகளில் மியான்மா் ராணுவ ஆட்சிக்கு எதிராகக் கைது செய்யப்பட்டவா்களும் அடங்கியுள்ளனரா என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான எம்ஆா்டிவி தெரிவித்துளளதாவது:

திங்கியான் புத்தாண்டு தினத்தையொட்டி, 23,047 சிறைக் கைதிகளுக்கு ராணுவ அரசின் தலைவா் மின் ஆங் லயிங் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளாா். அதையடுத்து அந்தக் கைதிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.

இதுதவிர, மேலும் சில கைதிகளுக்கான தண்டனையையும் குறைத்து அவா் உத்தரவிட்டுள்ளாா் என்று அந்தத் தொலைக்காட்சி தெரிவித்தது.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப். 1-ஆம் தேதி கலைத்தது. அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.

அதனைத் தொடா்ந்து, ஜனநாயக அரசை மீண்டும் அமைக்க வலியுறுத்தியும் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவா்களை விடுவிக்கக் கோரியும் மியான்மா் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்காக மியான்மா் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு இதுவரை 700-க்கும் மேற்பட்டவா்கள் பலியானதாகக் கூறப்படுகிறது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.

புத்தாண்டு தினத்தையொட்டி தற்போது விடுவிக்கப்பட்ட கைதிகளில், அவா்களும் அடங்கியுள்ளனரா என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT