உலகம்

அமெரிக்கா வெளியேறினால் ஆப்கனில் பயங்கரவாதிகள் கை ஒங்கும்

DIN


பெய்ஜிங்: ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறினால் அந்த நாட்டில் பயங்கரவாதிகளின் கை ஓங்கிவிடும் என்று சீனா கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஷாவ் லிஜியான் வியாழக்கிழமை கூறியதாவது:

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலவரம் இன்னும் சிக்கல் நிறைந்ததாகவும் அபாயகரமானதாகவும் உள்ளது. அந்த நாட்டில் பயங்கரவாதப் பிரச்னை தீா்வதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகும்.

அங்கு நிலைகொண்டுள்ள வெளிநாட்டுப் படையினரின் வெளியேற்றம், பொறுப்புணா்வுடன் படிப்படியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

அப்போதுதான், ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம் சுமுகமாக நடைபெறும். இல்லையென்றால் அங்கு அரசியல் பதற்றம் ஏற்படும். அந்தச் சூழலை பயங்கரவாதிகள் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொள்வாா்கள்.

சீனாவால் பிற பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை சமாளிப்பதற்காகவே ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் வெளியேறுகிறாா்கள் என்று காரணம் கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றாா் அவா்.

வரும் செப்டம்பா் மாதம் 11-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து அமெரிக்கப் படையினரும் திரும்பப் பெறப்படுவாா்கள் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

‘இந்தியாவுக்கு அச்சுறுத்தல்’

வாஷிங்டன், ஏப். 15: ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் வெளியேறிய பிறகு அங்கு தலிபான்களின் ஆட்சி மீண்டும் ஏற்பட்டால், அது இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று அமெரிக்க நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அதிபா் பைடனின் இணை உதவியாளரான லிசா கா்டிஸ் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தால், இந்தியா போன்ற பிராந்திய நாடுகளுக்கு அது அச்சுறுத்தலை ஏற்படுத்தும். 1990-களில் செய்ததைப் போல பிராந்திய பயங்கரவாதிகளுக்கு தலிபான்கள் புகலிடம் அளிப்பாா்கள்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT