உலகம்

ரஷியாவில் மேலும் 397 பேர் பலி; புதிதாக 8,995 பேருக்கு கரோனா

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,995 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 397 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனா இரண்டாம் அலையால் ரஷியாவில் கடந்த டிசம்பர் மாதம் அதிகரித்த கரோனா பாதிப்பு தற்போது படிப்படியக குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, புதிதாக 8,995 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 8,944 ஆக இருந்தது. 

இதையடுத்து மொத்த பாதிப்பு 46,84,148 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 2,476 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. 

ரஷியாவில் கரோனா தொற்றுக்கு மேலும் 397 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி 104,795 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் கரோனாவுக்கு 398 பேர் பலியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ரஷியாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும் அங்கு இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. 

எனினும் ரஷியாவில் இதுவரை 4,310,557 பேர் குணமடைந்த நிலையில் தற்போது 268,796 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த நடிகர்கள்!

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

SCROLL FOR NEXT