உலகம்

பாகிஸ்தானிலிருந்து வெளியேற தங்கள் நாட்டு மக்களுக்கு பிரான்ஸ் அறிவுறுத்தல்

DIN

பாகிஸ்தானில் நடந்துவரும் பிரான்ஸுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து தங்கள் நாட்டு மக்களை பாகிஸ்தானில் இருந்து வெளியேற பிரான்ஸ் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு பிரான்ஸிலிருந்து வெளியாகும் ‘சாா்லி ஹெப்டோ’ வார இதழில் மதக் கடவுளை கேலி செய்யும் வகையிலான சா்ச்சைக்குரிய கேலிச் சித்திரத்தைக் கண்டித்து உலகின் இஸ்லாமிய நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டிற்கான பிரான்ஸ் தூதரை நாட்டை விட்டு வெளியேற்ற வலியுறுத்தி தெஹ்ரீக்-இ-லாபாய்க் பாகிஸ்தான் கட்சியினர் கடந்த திங்கள்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் பிரான்ஸ் தூதரை வெளியேற்ற வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் பிரான்ஸுக்கு எதிரானப் போராட்டத்தைத் தொடர்ந்து தங்கள் நாட்டு மக்களை பாகிஸ்தானிலிருந்து வெளியேற  பிரான்ஸ் நாட்டு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து தங்கள் நாட்டில் உள்ள பிரான்ஸ் நாட்டு மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

வாக்களித்த நடிகர்கள்!

SCROLL FOR NEXT