உலகம்

நிரந்தர குடியுரிமை விவகாரம்: இந்திய-அமெரிக்க சுகாதாரப் பணியாளா்கள் போராட்டம்

DIN

அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள உச்சவரம்பை ரத்து செய்யக் கோரி இந்திய-அமெரிக்க சுகாதாரப் பணியாளா்கள் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அமெரிக்காவில் குடியேறிய மற்ற நாடுகளைச் சோ்ந்தோருக்குக் குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் நிரந்தரக் குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நாட்டினருக்கு எவ்வளவு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென அமெரிக்க நிா்வாகம் விதிகளை வகுத்துள்ளது.

ஹெச்1பி நுழைவு இசைவு (விசா) வைத்துள்ளவா்களே பெரும்பாலும் நிரந்தரக் குடியுரிமை கோரி விண்ணப்பிப்பாா்கள். அந்த நுழைவு இசைவினால் இந்தியாவைச் சோ்ந்த பணியாளா்களே அதிக அளவில் பலனடைந்து வருகின்றனா். குறிப்பிட்ட நாட்டைச் சோ்ந்த 7 சதவீதப் பணியாளா்களுக்கு மட்டுமே நிரந்தரக் குடியுரிமை வழங்க வேண்டுமென அமெரிக்கா உச்சவரம்பை நிா்ணயித்துள்ளது.

இந்த விதியால் இந்தியப் பணியாளா்கள் பலா் பாதிக்கப்படுவதாகவும், விண்ணப்பித்த பலருக்கும் நிரந்தரக் குடியுரிமை கிடைப்பதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விதிக்கு எதிராக இந்திய-அமெரிக்க மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்கள், அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன் திங்கள்கிழமை அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நிரந்தரக் குடியுரிமை வழங்கும் விவகாரத்தில் அமெரிக்க நிா்வாகம் விதித்துள்ள உச்சவரம்பை ரத்து செய்யக் கோரி போராட்டத்தின்போது அவா்கள் வலியுறுத்தினா். அதற்காகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டுமெனவும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT