உலகம்

ரஷியாவில் ஒருநாளில் 277 பேர் கரோனாவுக்கு பலி

12th Apr 2021 05:06 PM

ADVERTISEMENT

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,320 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 277 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனா இரண்டாம் அலையால் ரஷியாவில் கடந்த டிசம்பர் மாதம் அதிகரித்த கரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, புதிதாக 8,320 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 8,702 ஆக இருந்தது. 

இதையடுத்து மொத்த பாதிப்பு 46,49,710 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 1,833 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

ரஷியாவில் கரோனா தொற்றுக்கு மேலும் 277 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி 1,03,263 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் கரோனாவுக்கு 377 பேர் பலியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ரஷியாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும் அங்கு இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. 

எனினும் ரஷியாவில் இதுவரை 42,72,165 பேர் குணமடைந்த நிலையில் தற்போது 2,74,282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT