உலகம்

எகிப்தில் 3,000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு(விடியோ)

DIN

எகிப்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 3,000 ஆண்டுகள் பழமையான இழந்த நகரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

எகிப்தின் தெற்கு மாகாணமான லக்ஸரில் இந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்பொருள் ஆய்வாளர் சாஹி ஹவாஸ் தெரிவித்தார். 

இது பண்டைய எகிப்தின் ஒரு பொற்காலம் என்று கருதப்படுகிறது. 18 வது வம்சத்தைச் சேர்ந்த மன்னன் மூன்றாம் அமென்ஹோடெப்பின் கீழ் இந்த நகரம் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

மன்னர் துதன்கமுன் கட்டிய கோயிலைத் தேடி இப்பகுதியில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்ட நிலையில் இந்த பழமையான நகரம் கிடைத்துள்ளது. 

பழங்காலத்தைச் சேர்ந்த மண், செங்கல் வீடுகள், கலைப்பொருட்கள், கருவிகள் அன்றாடம் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், தனித்தனி அறைகள், மோதிரங்கள், வண்ண மண்பாண்டங்கள், களிமண்ணால் ஆன நூல்நூற்பு மற்றும் நெசவு கருவிகள் இங்கு கிடைத்துள்ளன. 

இந்த நகரத்தை மன்னர் மூன்றாம் அமென்ஹோடெப்பின் பேரன் துதன்கமுன் மற்றும் துதன்கமுனின் மகன் அய் ஆகியோர் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களை அழைத்து வர 35 அரசு வாகனங்கள் தயாா்

ஏப். 21, மே 1-இல் மதுக் கடைகள் மூடல்

SCROLL FOR NEXT