உலகம்

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 177ஐ எட்டியது

12th Apr 2021 01:05 PM

ADVERTISEMENT

 

இந்தோனேசியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்சி பலியானோர் எண்ணிக்கை 177 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 45 பேர் காணவில்லை என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலச்சரிவில் சிக்சி புளோரஸ் மாவட்டத்தில் 72 பேரும், லெம்பட்டா மாவட்டத்தில் 47 பேரும், அலோர் மாவட்டத்தில் 28 பேரும்  உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடையே பேசிய மாகாண துணை ஆளுநர் ஜோசப் நா சோய் கூறுகையில், 

ADVERTISEMENT

பாறைகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதிகளுக்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் உதவிகள் விநியோகிக்கப்பட உள்ளோம். 

தொடர்ந்து, மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது என்று அவர் கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT