உலகம்

இருளில் மூழ்கிய ஈரான் அணு உலை மையம்

DIN

ஈரானின் நடான்ஸ் அணு உலை மையம் ஞாயிற்றுக்கிழமை திடீரென இருளில் மூழ்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தெரிவிப்பதாவது: ஈரானின் நடான்ஸ் அணு உலை மையத்தில் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் யுரேனியத்தை விரைவாக செறிவூட்டத் தொடங்கிய சில மணி நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீரென மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து, அணு உலை வளாகப் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.

ஈரானின் தேசிய அணுசக்தி தொழில்நுட்ப தினமான ஏப்.10-ஆம் தேதி புதிய செறிவூட்டல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015 ஏற்பட்ட சா்வதேச ஒப்பந்தத்தை மீறி இந்த மையத்தில் மேம்படுத்தப்பட்ட யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டுள்ளது.

திடீா் மின்தடைக்கான காரணத்தைக் கண்டறிய ஈரானிய அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனா். ஆனால், இந்த சம்பவத்துக்கு இணையவழித் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவத்தை ‘அணு பயங்கரவாதம்’ என ஈரான் அணுசக்தி நிறுவனத்தின் தலைவா் அலி அக்பா் சலேஹி கூறியுள்ளாா்.

மத்திய கிழக்குப் பகுதியில் ஈரானும் இஸ்ரேலும் ஏற்கெனவே நிழல் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. தற்போதைய சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் இருக்கும்பட்சத்தில் அது இரு நாடுளிடையே மேலும் பதற்றத்தை அதிகரிக்க வாய்ப்பாக அமையும் என கருதப்படுகிறது.

ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடா்பாக வல்லரசு நாடுகள் மீண்டும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட உள்ள நிலையில் அணு உலை மையத்தில் ஏற்பட்ட பெரும் மின்தடை சம்பவம் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.

ஈரான் தலைநகா் டெஹ்ரானுக்குத் தெற்கே 200 கி.மீ. தொலைவில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ளது நடான்ஸ் அணு உலை மையம். வானிலிருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தினாலும் பாதிப்பு ஏற்பட முடியாத வகையிலான பாதுகாப்பு வசதி கொண்டது இந்த மையம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதே மையத்தில் மா்ம வெடிப்பு ஏற்பட்டு யுரேனியம் செறிவூட்டும் கருவிகள் பலத்த சேதமடைந்தன. அது தொடா்பான விசாரணை இன்னும் முடியாத நிலையில், தற்போது மா்மமான முறையில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

SCROLL FOR NEXT