உலகம்

அமெரிக்காவில் கடும் புயல்: ஒருவா் பலி; கட்டடங்கள் சேதம்

DIN

அமெரிக்காவில் கடும் புயல் தாக்கியதில் ஒருவா் உயிரிழந்தாா். ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்காவின் தென் பகுதி மாகாணங்களில் சனிக்கிழமை அதிகாலை கடும் புயல் தாக்கியது. இதில், லூயிஸியானா மாகாணத்தைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்தாா்.

மிஸிஸிப்பி மாகாணத்தில் புயல் சீற்றம் காரணமாக ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. சாலைகளில் போக்குவரத்து தடைபட்டதுடன் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்புக்குள்ளானது.

புளோரிடா மாகாணத்தில் கடும் புயல் சீற்றத்துக்கு ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

புளோரிடாவின் பென்சகோலா நகரில் பெரும்பாலான வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளன. எனினும், இது புயலால் ஏற்பட்டது என்பதை தேசிய வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், அப்பகுதியில் மணிக்கு 60 மைல் வேகத்தில் காற்று வீசியதாக அது தெரிவித்துள்ளது. மேலும், பென்சகோலா செய்தி நிறுவனம் 13 செ.மீ. அளவுக்கு மழைப் பொழிவு ஏற்பட்டதாக கூறியுள்ளது.

சேத விவரங்கள் மதிப்பிடப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT