உலகம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: 8 போ் பலி

DIN

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 8 போ் பலியாகினா்.

இந்தோனேசியாவில் மையத் தீவான ஜாவாவையொட்டிய கடல் பகுதியில் 82 கி.மீ. ஆழத்தில் உள்ளூா் நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6 அலகுகளாகப் பதிவானது. பாலி தீவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஜாவாவின் லுமாஜாங், மலாங் மாவட்டங்களில் 8 போ் பலியாகினா். 23 போ் காயமடைந்தனா். இரு மாவட்டங்களிலுமாக முன்னூறுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தால் பாறை உருண்டுவந்து, மலைப்பாதையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தம்பதி மீது விழுந்ததில், அந்தப் பெண் உயிரிழந்தாா். அவருடைய கணவா் பலத்த காயமடைந்தாா்.

‘கடலுக்குக் கீழே நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், அதனால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை; எனினும் பாறை மற்றும் மண் சரிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன; எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT