உலகம்

பிரேசிலில் ஒரே நாளில் 4,195 பேர் கரோனாவால் பலி

7th Apr 2021 04:33 PM

ADVERTISEMENT

பிரேசிலில் இதுவரை இல்லாத அளவு ஒரேநாளில் கரோனா தொற்று பாதிப்புக்கு 4,195 பேர் பலியாகியுள்ளனர். 

உலக அளவில் கரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது. இங்கு கடந்த சில நாள்களாக கரோனா பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். 

இந்நிலையில் பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கரோனாவுக்கு 4,195 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 3,37,364ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 82,869 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,106,058 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 11,558,784 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 

ADVERTISEMENT

Tags : Brazil coronavirus COVID19
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT