உலகம்

சர்வதேச விமானத்தில் செல்லிடப்பேசி, இணைய சேவைகளுக்கு நேபாளம் அனுமதி

1st Apr 2021 05:53 PM

ADVERTISEMENT


காத்மாண்டு: தெற்காசிய நாடுகளில் இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக, சர்வதேச விமான பயணத்தின்போது, பயணிகள் தொலைத்தொடர்பு மற்றும் இணையச் சேவைகளைப் பயன்படுத்த நேபாளம் அனுமதி வழங்கியுள்ளது.

மார்ச் 22-ஆம் தேதி நேபாள தொலைத் தொடர்புத் துறை, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவை, நேபாள விமானப் போக்குவரத்துக் கழகத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

தரைப் பகுதியிலிருந்து விமானம் 10 ஆயிரம் அடி உயரத்துக்கு மேல் பறந்துகொண்டிருக்கும் போது, சர்வதேச விமானப் பயணிகள் செல்லிடப்பேசி மற்றும் இணைய வசதிகளைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 

Tags : nepal flight
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT