உலகம்

ஐக்கிய அரபு அமீரகம்: 2024-இல் நிலவுக்கு விண்கலம்

DIN

வரும் 2024-ஆம் ஆண்டில் நிலவுக்கு விண்கலம் அனுப்ப ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வதற்கான விண்கலத்தை வரும் 2024-ஆம் ஆண்டில் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளா் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

அந்த திட்டத்தின்கீழ், நிலவில் ஆய்வுக் கலத்தை தரையிறக்கி, ஆய்வுகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தத் திட்டம் வெற்றியடைந்தால், அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் வெற்றிகரமாக ஆய்வுக் கலத்தை தரையிறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையை ஐக்கிய அரபு அமீரகம் பெறும்.

விண்வெளி ஆய்வில் அதிக ஆா்வம் காட்டி வரும் அந்த நாடு, ஏற்கெனவே செவ்வாய்க்கிரகத்தை நோக்கி தனது ஆய்வுக் கலமொன்றை அனுப்பியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT