உலகம்

எய்ட்சிலிருந்து குணமான உலகின் முதல் நோயாளி கேன்சருக்கு பலி!

DIN

லண்டன்: எய்ட்ஸ் நோய் பாதிப்பிலிருந்து குணமான உலகின் முதல் நோயாளி என்று அறியப்படும் திமோதி ரே பிரவுன் கேன்சருக்கு பலியாகியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் திமோதி ரே பிரவுன். இவர் கடந்த 1995-ஆம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரில் வசித்தபோது இவருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதற்கான சிகிச்சைகளை திமோதி மேற்கொண்டு மருந்துகளை உட்கொண்டு வந்தபோது, 2007-ஆம் ஆண்டில் திமோதி ‘அக்யூட் மைலைட் லுகீமியா’ என்னும் ரத்தப் புற்று நோய் செல்களின் பாதிப்புக்கு உள்ளானர்.

அந்த நோய் பாதிப்பிற்கு சிகிச்சை என்பது அவரது உடலில் ரத்தப் புற்று நோய் செல்களின் உற்பத்திக்கு காரணமாக இருக்கும் பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜையை நீக்கி விட்டு, புதிய எலும்பு மஜ்ஜையை பொருத்துவது ஒன்றுதான். எனவே தகுந்த கொடையாளர் ஒருவரிடம் இருந்து திமோதிக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட்டது.     

அதன்பொருட்டு திமோதிக்கு தானம் செய்தவரின் டிஎன்ஏ எனப்படும் மரபணுவில் ஒரு அபூர்வமான இயற்கை மாற்றம் (ம்யூட்டேஷன்) காணப்பட்டது. அதன்படி எய்ட்ஸ் நோயினை உண்டாக்கும் ஹெச்.ஐ.வி வைரஸ் உடலுக்குள் புகுவதற்கு அது தடையினை ஏற்படுத்தியது. இதன்காரணமாக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை முடிந்த பிறகு திமோதியின் உடலில் சோதனை செய்தபோது ஹெச்.ஐ.வி வைரஸ் மிக குறைந்த அளவிற்குச் சென்று ஒரு கட்டத்தில் முழுவதுமாக நீங்கி விட்டது. இதன்காரணமாக திமோதி எய்ட்ஸ் நோய் பாதிப்பிலிருந்து குணமான உலகின் முதல் நோயாளி என்று அறியப்படுகிறார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக திமோதி இந்த ஆண்டு துவக்கத்தில் மீண்டும் குறிப்பிட்ட அந்த ‘அக்யூட் மைலைட் லுகீமியா’ வகை  புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானார். இம்முறை அது மூளை மற்றும் முதுகுத்தண்டில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதன்காரணமாக திமோதி புதனன்று காலமானார்.

இந்தத் தகவலை அவரது துணைவி டிம் ஹாப்ஜென் அவரது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT