உலகம்

10 ஆண்டுகளாக வரி செலுத்தவில்லையா? பத்திரிகை செய்திக்கு டிரம்ப் மறுப்பு

DIN


வாஷிங்டன்: பத்து ஆண்டுகளாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வருமான வரி செலுத்தவில்லை என்ற நாளிதழ் செய்தியை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 2016 - ஆம் ஆண்டிலும், அதற்கு அடுத்த ஆண்டிலும் தலா 750 டாலர் மட்டுமே வருமான வரியாகச் செலுத்தியுள்ளார்; அதேவேளையில் அவரது நிறுவனங்கள் இந்தியாவில் 2017 - ஆம் ஆண்டில் 1.45 லட்சம் டாலர் வருமான வரியாகச் செலுத்தியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் மேலும் தெரிவித்திருப்பது: பெரும் தொழிலதிபரான டிரம்ப் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகளாக வருமான வரியே செலுத்தவில்லை. தான் சம்பாதித்ததைவிட அதிக இழப்புகள் ஏற்பட்டதாகக் காரணம் தெரிவித்து வருமான வரி செலுத்துவதை அவர் தவிர்த்துள்ளார். அமெரிக்க அதிபர்கள் தங்களது சொந்த நிதி குறித்த தகவலை வெளியிட வேண்டிய சட்டப்படியான அவசியம் இல்லை. எனினும், ரிச்சர்ட் நிக்ஸன் தொடங்கி அதிபராக இருந்த அனைவருமே அதைச் செய்துள்ளனர். ஆனால், தனது வருமான வரி தொடர்பான விவரங்களை வெளியிடாத ஒரே அதிபர் டிரம்ப்தான்.

அதிபர் டிரம்ப்பின் பதவிக் காலத்தின் முதல் இரண்டு ஆண்டுகளில், வெளிநாடுகளிலிருந்து அவருக்கு வருமானமாக 7.3 கோடி டாலர் வந்துள்ளது.

இதில் பெரும்பகுதி ஸ்காட்லாந்து, அயர்லாந்தில் உள்ள அவரது கோல்ஃப் நிறுவனங்களிலிருந்து கிடைத்துள்ளது. பிலிப்பின்ஸிலிருந்து 30 லட்சம் டாலர், இந்தியாவிலிருந்து 23 லட்சம் டாலர், துருக்கியிலிருந்து 10 லட்சம் டாலர் கிடைத்துள்ளது.

 2017-இல் அதிபர் டிரம்ப் அமெரிக்க அரசுக்கு வருமான வரியாக 750 டாலர் மட்டுமே செலுத்தியுள்ளார். ஆனால், இந்தியாவில் 1.45 லட்சம் டாலர், பிலிப்பின்ஸில் 1.56 லட்சம் டாலர் வரியாக செலுத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தியை பொய்ச் செய்தி என அதிபர் டிரம்ப் மறுத்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. தான் ஏராளமான வரியை செலுத்தியுள்ளதாகவும், வரி விவரங்கள் தணிக்கையில் இருப்பதால் அது முடிவடைந்ததும் தான் செலுத்திய வரி விவரங்கள் குறித்து தெரியவரும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT